Thursday, May 23, 2013

பயன் உள்ள மென்பொருட்கள்.(BEST MEDIA PLAYERS)


பயன் உள்ள மென்பொருட்கள்.(BEST MEDIA PLAYERS)






     யன் உள்ள மென்பொருட்கள் பிரிவில் தற்போது நாம் காண இருப்பது. சிறந்த மீடியா பிளேயர்கள் பற்றி.
நம்மிள் பாதிக்கு மேலானோர் தங்கள் கணினி மூலம் படங்களை, பாடல்களை கண்டுகளிக்கின்றோம்.மேலும் தங்கள் படிப்பு, கம்பெனி வேலைகளுக்காகவும் நாம் மீடியாவை நாடவேண்டி இருக்கிறது.

     நாம் நம் கணினியில் பாடல், பாடங்கள்,மேலும் சிலவற்றை காண எதை பயன்படுத்துவோம்! ஆம் மீடியாபிளேயர் என்னும் மென்பொருளை தான் பயன்படுத்துவோம்...பெரும்பாலனவர்கள் பயன்படுத்துவது விண்டோஸ் மீடியாபிளேயரை தான். அதற்கு முக்கிய காரணம், அது தங்கள் கணினியில் OS Install பண்ணும் போதே இலவசமாக பதியபடுக்கிறது....ஆனால் விண்டோஸ் மீடியா பிளேயர்கள் சில வகை மீடியா பைல்களை பயன்படுத்த மறுக்கிறது...
உதாரணமாக தாங்கள் DVD பைல்களை பயன்படுத்தினால் சில ERROR செய்திகளை காட்டுக்கிறது....

     இதற்கு பதில் நமக்கு இணையத்தில் இலவசமாக சில சிறந்த மீடியா பிளேயர்கள் கிடைக்கின்றன்....அவற்றை தான் நாம் காண் இருக்கிறோம்...

முதலில் நாம் காண இருப்பது.
1.Winamp

 பலரது பாரட்டுகளையும் கருத்துகளை பெற்று சிறப்பான முறையில் செயல்படுகிறது. பார்க்க அழகிய தோற்றத்துடன் காட்சியளிக்கிறது.
    இதை கையாளுவது எளிமையாக உள்ளது...புதியவர்கள் கூட எளிமையாக பயன்படுத்தலாம்.Side Menu, Playlist Menu, Information Menu என அழகாக உள்ளது.
     பல அழகிய தீம்ஸ்கள் தங்களுக்கு வழங்கபடுகிறது. மேலும் பல வகையான கலர் தீம்ஸ்களும் உள்ளன.
     அழகிய BackGround Visual Effectகளும் தரப்பட்டுள்ளன்.இது தங்கள் பாடல் இசைக்கு ஏற்ப மாறும்...
     இதன் குறை இதுவும் சில பைல்களை இயக்க மறுக்கிறது....ஆனால் விண்டோஸ் மீடியாபிளேயருடன் ஒப்பிடும் போது இது சிறந்தது.
இடம்-1.
Download:winamp(1) Winamp(2) Winamp(3)

2.Kantaris Player 
     மிக அழகிய கருமை நிறத்துடன் காட்சியளிக்கிறது....பார்ப்பதற்கு அழகு ஏற்றாற் போல் இதன் செயலும் அருமையாகவே உள்ளது..இது அனைத்து வகையான பைல்களையும் சிறப்பாக பயன்படுத்துகிறது....அடிக்கடி சில Animation Effectகளையும் தந்து நம்மை ஆச்சிரிய பட வைக்கிறது...இதன் சிறிய குறை மற்றதை காட்டிலும் சற்று அதிக Ramயை பயன்படுத்துகிறது. இல்லையெனில் இதற்கு தான் முதல் இடம்...
இடம்-2.
Download:Kantaris(1) kantaris(2)


3. VLC Player





    இது சிறந்த ஒன்றாக விளங்குகின்றது. பார்க்க அவ்வளவு அழகாக இல்லாவிட்டாலும் எளிமையாக உள்ளது...ஆனால் இதன் சிறப்பு...இது அனைத்து வகையான பைல்களையும் ஏற்றுக்கொள்ளிகிறது...நல்ல தரத்திலும் OutPutயை வழங்குகிறது....இதன் குறை என்று செல்வதற்க்கு பெரிதாக ஒன்றும் இல்லை...இதன் தோற்றம் மற்றும் தான்.
இடம்-3.
Download:Vlc(1) Vlc(2)

4.Universal Media Player




     இது பார்பதற்கு அழகாகவும் சிறியதாகவும் எளிமையாகவும் உள்ளது....இதுவும் அனைத்து வகையான பைல்களையும் ஏற்றுக்கொள்கிறது...மேலும் ஒரு படி மேலே போய் SWF பைல்களான் பிளாஸ் Flash பைல்களையும் ஏற்றுக்கொள்கிறது மேலும் இதன் தரம் சிறப்பாகவே உள்ளது. Picture Quality அருமை..நான் பாடங்களை காண பயன்படுத்துவதில் தற்போது இது தான் சிறந்தது.
இடம்-4.
Download:Universal(1) Universal(2) Universal(3)

5. KM Player





     இதுவும் பார்க்க எளிமையாக தான் உள்ளது...Universal Playerயை போலவே அனைத்து வகையான பைல்களையும், Flash பைல்களை ஏற்று கொள்கிறது..இதன் குறை அடிக்கடி அப்படியே உரைந்து போய் நின்றுவிடுகிறது...சில சமயங்களில் சிறிது நேரம் நமது கணினி உரைந்து நிற்கும் படி செய்துவிடுக்கிறது.
இடம்-5.
Download:Km(1) Km(2) Km(3)


(இந்த கணிப்பு விண்டோஸ் பிளேயரை தவிர.)

   இது கணிப்பு அனைத்தும் நான் பயன்படுத்தி பார்த்ததில். உலகளவில் இதன் தரம் மாறும். நன்றி