Saturday, August 1, 2015

USE FACEBOOK AS UNIVERSAL SHARE PLATFORM

இன்றைய இணையமானது வெறும் பொழுது போக்கிற்காக மாத்திரம் இன்றி ஒவ்வொருவரினதும் கற்றல் நடவடிக்கைகளுக்கும் உதவுகின்றது. அது மாத்திரம் அல்லாமல் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளவும், அன்றாட தகவல்களை பெற்றுக்கொள்ளவும் என இதன் பயன்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.



எனவே எமது பல்வேறு தேவைகளுக்காக நாம் அன்றாடம் இணையத்தைஅணுகினாலும் அவற்றின் மூலம் ஒரு சில வசதிகளையே நாம் தொடர்ச்சியாக பயன்படுத்துகின்றோம் ஆனாலும் அவற்றுள் மறைந்து கிடக்கும் வசதிகளும் ஏராளம் உண்டு.



உதாரணத்திற்கு நாம் Google தளத்தை நாடுவது வெறும் தகவல்களையோ புகைப்படங்களையோ தேடிப்பெருவதற்கு மாத்திரமே என்றாலும் அதன் மூலம் ஏராளமான வித்தைகள் செய்ய முடியும் என்பதை நம்மில் அநேகமானோர் அறிந்ததில்லை.

அதே போல் நாம் அன்றாடம் பயன்படுத்தும் Facebook தளத்திலும் ஏராளமான வசதிகள் தரப்பட்டுள்ளது என்றாலும் அவைகளை நாம் அறிந்திராததால் அவற்றினை நாம் பயன்படுத்துவது குறைவு.


அந்தவகையில் Facebook தளத்தில் உங்கள் உறவினர்கள் நண்பர்களுக்கு மத்தியில் கோப்புக்களை பகிர்ந்து கொள்ளவும் வசதி தரப்பட்டுள்ளது.

இந்த வசதி மூலம் ஆவணங்கள், Audio, வீடியோ, என எந்த ஒன்றினையும் பகிர்ந்து கொள்ள முடியும்.

இவ்வாறு கோப்புக்களை நீங்களும் உறவினர்கள் நண்பர்களுக்கு மத்தியில் பகிர்ந்து கொள்ள விரும்பினால் கீழுள்ள வழிமுறையை பின்பற்றுக.


  • உங்கள் Facebook கணக்கிற்குள் நுழைந்த பின் நீங்கள் யாருடன் கோப்பு ஒன்றினை பகிர்ந்து கொள்ள விரும்புகின்றீகளோ அவருக்குரிய Chat Box ஐ திறந்து கொள்க.
முகநூல் அரட்டை இடைமுகம்

  • பின் அதன் வலது மேல் மூலையில் தரப்பட்டிருக்கும் சிறிய Gear Icon ஐ சுட்டுவதன் மூலம் Add File என்பதனை சுட்டுக.
முகநூல் அரட்டை

  • இனி தோன்றும் சாளரத்தின் மூலம் உங்கள் கணினியில் இருக்கும் கோப்புக்களை தெரிவு செய்து அவற்றினை உங்கள் உறவினர்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.


அவ்வளவு தான்.