Saturday, August 1, 2015

ALTERNATE SOFTWRES COMPARER FOR UNIVESAL

  • அன்றாடம் அல்லது அடிக்கடி கணினியை பயன்படுத்தும் நாம் கணினியின் மூலம் பல்வேறு செயற்பாடுகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு என ஏராளமான மென்பொருள்களை பயன்படுத்துகிறோம் அல்லவா?
மாற்று வழிகள்

  • அதே போல் இணையத்தின் ஊடாகவும் ஏராளமான சேவைகளை இலவசமாகவும் கட்டணம் செலுத்தியும் பெறுகின்றோம் அல்லவா?
  • மேலும் Smart சாதனங்கள் ஊடாக பயன்களை பெற்றுக்கொள்வதற்கு என அதிலும் ஏராளமான மென்பொருள்களை நிறுவி பயன்படுத்துகின்றோம் அல்லவா?
  • இவைகள் தவிர பொழுதுபோக்கிற்காகவும் போட்டியிற்காகவும் கணினிமூலமாகவும் Smart சாதனங்களை பயன்படுத்தியும் ஏராளமான விளையாட்டுக்களை விளையாண்டு மகிழ்கிறோம் அல்லவா?

இவைகள் அனைத்தின் மூலமும் நீங்கள் பூரண திருப்தி அடைகின்றீர்களா? பெரும்பாலும் இல்லை என்றே கூற வேண்டும். 

  • அதாவது நாம் குறிப்பிட்ட ஒரு மென்பொருளை பயன்படுத்தும் போது அந்த மென்பொருளில் ஏராளமான வசதிகள் தரப்பட்டிருந்தாலும் நாம் விரும்பி எதிர்பார்க்கக் கூடிய ஒரு வசதி தரப்படாமல் இருக்கலாம்.
  • அல்லது குறிப்பிட்ட மென்பொருளில் அனைத்து வசதிகளும் தரப்பட்டிருந்தாலும் குறிப்பிட்ட மென்பொருள் கட்டணம் செலுத்தி பயன்படுத்த வேண்டிய ஒன்றாக இருக்கலாம்.
  • அல்லது குறிப்பிட்ட மென்பொருளில் மேலதிக வசதிகளை பெற கட்டணம் செலுத்த வேண்டி இருக்கலாம்.
  • இல்லையெனில் குறிப்பிட்ட மென்பொருளில் ஏராளமான வசதிகள் தரப்பட்டிருந்தாலும் அதனை பயன்படுத்துவதற்கான பூரண அறிவின்றி இருக்கலாம்.

இதனையும் பார்க்க: மென்பொருள்களின் முன்னைய பதிப்புக்களை தரவிறக்கிக்கொள்ள உதவும் இணையதளம்.

இது போன்ற பல்வேறு சந்தர்பங்களிலும் நாம் எதிர்பார்ப்பது குறிப்பிட்ட மென்பொருளுக்கு அல்லது சேவைக்கு ஈடான இன்னும் ஒன்றினையே ஆகும்.


உதாரணத்திற்கு Photoshop மென்பொருளை பயன்படுத்த அது தொடர்பில் ஓரளவாவது அறிந்திருக்க வேண்டும். என்றாலும் கணினியை பயன்படுத்தும் முதல் நிலை பயனர்களாலும் Photoshop மென்பொருள் மூலம் மேற்கொள்ள முடியுமான ஏராளமான செயற்பாடுகளை மிக இலகுவாக Photoscape மென்பொருள் மூலம் மேற்கொள்ள முடியும்.

அதே போல் தற்பொழுது அதிகம் பேசப்பட்டு வரும் Whatsapp Messenger சேவையின் கணக்கொன்றினை ஒரு வருடத்திற்கே இலவசமாக பயன்படுத்த முடியும் இருப்பினும் Telegram சேவையானது Whatsapp இற்கு ஈடான சேவையை தரக்கூடிய முற்றிலும் இலவசமான ஒரு சேவையாகும்.

எனவே நாம் பயன்படுத்தும் மென்பொருள் மூலம் அல்லது சேவையின் மூலம் நாம் பூரண திருப்பதி அடையாவிட்டால் அதற்கு ஈடான ஒன்றினை தேடி அறிந்துகொள்ள உதவுகின்றது Alternativeto எனும் இணையதளம். 


இந்த தளத்தில் வலது மேல் மூலையில் தரப்பட்டுள்ள Search Box இல் குறிப்பிட்ட ஒரு மென்பொருளின் அல்லது சேவையின் பெயரை தட்டச்சு செய்தால் குறிப்பிட்ட அது தொடர்பான ஒரு விளக்கத்தினை Alternativeto எனும் தளம் தருவதுடன் அதற்கு ஈடான அத்தனை மென்பொருள்கள், சேவைகளையும் குறிப்பிட்ட தளம் பட்டியல் படுத்துகின்றது.

Alternativeto இணையதளம்

மேலும் பட்டியல் படுத்தப்படும் மென்பொருள்கள் மற்றும் சேவைகளில் இலவசமாக பெறக்கூடியவை, கட்டணம் செலுத்தி பெறக்கூடியவை, திறந்த மூல மென்பொருள் என வெவ்வேறாக வேறு பிரித்துக்கொள்ளும் வசதியும் குறிப்பிட்ட தளத்தில் தரப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள், மாணவர்கள், அன்றாடம் கணினியை பயன்படுத்துபவர் என அனைத்து தரப்பினருக்கும் பயன்படும் இந்த தாளத்திற்கு நீங்களும் விஜயம் செய்ய விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.

Alternativeto