கணினியின் மூளையாக தொழிற்படும் ஒரு வன்பொருள் சாதனமே Central Processing Unit என அறியப்படும் CPU ஆகும்.
நாம் உள்ளிடும் தரவுகளை தகவல்களாக மாற்றும் பிரதான தொழிற்பாடு இந்த CPU எனும் சாதனத்தாலே இடம்பெறுகின்றது என்றாலும் இதற்கு RAM எனும் நினைவகத்தின் பங்கும் உண்டு.
Processor பிரதானமாக இரண்டு வகைப் படுகின்றது. அதில் ஒன்று 32 Bit எனவும் மற்றையது 64 Bit எனவும் இனங்காணப் படுகின்றது.
Bit என்பது Binary Digit என்பதன் சுருக்கமாகும் இதன் மூலமாகவே கணினியில் தரவுகள் சேமிக்கப்படுகின்றன. ஒரு பிட் என்பது 0 அல்லது 1 எனும் பெருமானங்களாக எடுக்கலாம். 1 மற்றும் 0 களால் ஆன எழுமாறான ஒரு சேர்மானமே (100100100111) Binary code எனப்படுகிறது.
Bit எனும் இந்த பெறுமானத்தை கொண்டே CPU கணித்தல் செயற்பாட்டில் ஈடுபடுகின்றது. 32 Bit வகையில் அமைந்த Processor மூலம் பூச்சியத்தில் இருந்து4,294,967,295 வரையான சேர்மானங்களை உருவாக்கலாம், அதே போல் 64 Bit வகையில் அமைந்த Processor மூலம் பூச்சியத்தில் இருந்து 18,446,744,073,709,551,615 வரையிலான வெவ்வேறு சேர்மானங்களை உருவாக்க முடியும். இதன் மூலம் 64 Bit வகையில் அமைந்த Processor கள் மூலம் அதிக அளவிலான தரவுகளை கையாள முடியும் என்பது தெளிவாகின்றது.
அத்துடன் கணினியில் Data Bus எனும் ஒரு விடயம் அமைந்துள்ளது இதன் தொழிற்பாடு RAM நினைவகத்தை Processor உட்பட கணினியின் இன்னும் பல பாகங்களுடன் இணைப்பதாகும். எனவே இங்கு 32 Bit ஐ அடிப்படையாகக் கொண்ட கணினியில் Data Bus இன் அளவு 32 Bit ஆக இருக்கும் அதேவேளை 64 Bit ஐ அடிப்படையாகக் கொண்ட கணினியில் Data Bus இன் அளவு அதன் இரு மடங்காக இருக்கும். எனவே 64 Bit கணினிகளில் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் கையாளப்படும் தரவுகளின் அளவு அதிகமாக இருப்பதால் அவைகள் 32 Bit கணினியிலும் பார்க்க வேகமாக இயங்கும்.
64 Bit Processor இன் கட்டமைப்பானது 32 Bit Processor இலும் பார்க்க பல மடங்கு மேம்பட்டதாக அமைந்திருக்கும் இதனால் 32 Bit Processor ஐ விட 64 Bit Processor அதிக செயற்திறன் வாய்ந்ததாக இருக்கும் எனினும் 64 Bit Processor களுக்கு ஆதரவு அளிக்கக்கூடிய மென்பொருள்கள் நிறுவப்படும் போதே இதன் பூரண பயனை பெற்றுக்கொள்ள முடியும்.
தற்பொழுது உருவாக்கப்படக்கூடிய இயங்குதளங்கள் உட்பட ஏராளமான மென்பொருள்கள் 64 Bit இற்கு ஆதரவு அளிக்கக்கூடிய வகையிலேயே உருவாக்கப்படுகின்றன.
இதன் காரணமாகவே இன்று இயங்குதளங்கள் உட்பட இன்னும் ஏராளமான மென்பொருள்களின் பதிப்புக்கள் 32 Bit, 64 Bit என வெவ்வேறாக கிடைக்கின்றன. பொதுவாக 64 Bit இயங்குதளம் நிறுவப்பட்ட கணனியில் 32 Bit பதிப்பை கொண்ட மென்பொருள்களை நிறுவ முடியும் என்றாலும் 32 Bit கணினியில் 64 Bit பதிப்பை கொண்ட மென்பொருள்களை நிறுவ முடியாது.
எனவே மென்பொருள்களை தரவிறக்கும் போது உங்கள் கணினி 64 Bit இற்கு ஆதரவு அளிக்கும் எனின் 64 Bit பதிப்பில் அமைந்த மென்பொருள்களை தரவிறக்கிபயன்படுத்துங்கள் இதன் மூலம் உச்ச பயனை பெற முடியும்.
அத்துடன் 32 Bit வகையில் அமைந்த கணினிகள் அதிகப்படியாக 4 GB RAM நினைவகத்தையே ஆதரவு அளிக்கும். என்றாலும் 64 Bit வகையில் அமைந்த கணினிகள் அவ்வாறில்லை 4 GB ஐ விட அதிக நினைவகத்தை கொண்ட RAM இற்கும் ஆதரவு அளிக்கும்.