Saturday, August 1, 2015

FIREFOX OPERATING SYSTEM FOR MOBILE

Firefox கைப்பேசியின் இயங்குதளம் Firefox OS ஆகும்.


இணைய உலாவிகளுக்கு பெயர் போன Mozilla Firefox அண்மையில் கைப்பேசி சந்தையில் குதித்திருப்பதை நாம் அறிவோம். Firefox Mobile Phone இன் இயங்கு தளமானது அதற்கென்றே வடிவமைக்கப்பட்ட Firefox OS ஆகும்.


கைப்பேசி இயங்குதளம்.
Firefox OS run on pc

Smart Phone களுக்கான இயங்குதளங்களில் ஏற்கனவே கொடிகட்டி பறந்துகொண்டிருக்கும் iOS மற்றும் Android ஆகியனவற்றுக்கு மத்தியில் Firefox OS என்பது சற்று புதிதான ஒன்றாகும். இதனை பயன்படுத்திப்பார்பதில் பலருக்கும் ஆர்வம் இருக்கலாம்.


எனவே Firefox OS ஐ பயன்படுத்தி பார்க்க Firefox Mobile Phone வரும்வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை மாறாக உங்கள் கணனியில் இருக்கும் Firefox இணைய உலாவிக்கு Firefox OS Simulator எனப்படும் Add-ons ஒன்றினை நிறுவுவதன் மூலம் Firefox OS ஐ நேரடியாக உங்கள் கணணி மூலம் பயன்படுத்திப்பார்க்கலாம்.


Firefox OS Simulator ஐ உங்கள் கணனியில் எவ்வாறு நிறுவுவது?

  • இதற்கு உங்கள் கணனியில் Firefox இணைய உலாவியை நிறுவியிருக்க வேண்டும்.
  • பிறகு "Firefox OS Simulator" (67MB) இந்த முகவரியில் இருக்கும் Firefox இற்கான Add-ons ஐ உங்களது Firefox இணைய உலாவிக்கு நிறுவிக்கொள்ளுங்கள். (இது தரவிறக்கப்பட்டு தானாக நிறுவப்படும் அவ்வாறு நிறுவப்படாவிட்டால் Firefox Menu ஊடாக சென்று Add-ons என்பதனை சுட்ட வரும் பக்கத்தில் Settings ஊடாக Install Add-ons from file என்பதன் மூலம் தவிரக்கப்பட்ட Firefox OS Simulator ஐ தெரிவு செய்து நிறுவிக்கொள்ளுங்கள்.)
  • பின் Firefox Menu ஊடாக சென்று Web Devoloper என்பதை தொட விரியும் சாளரத்தில் Firefox OS Simulator என்பதனை தெரிவு செய்யுங்கள். 
Firefox OS Simulator for firefox
    • பின் Simulator Dashboard - Firefox OS என New Tab ஒன்று திறப்பதனை அவதானிக்கலாம். 
    Firefox OS Simulator Dashboard

      • பிறகு அங்கு Simulator Stopped என்றிருக்கும் அதன் மேல் ஒருமுறை சுட்டுவதன் மூலம் Forefox OS இனை உங்களது கணனியில் பயன்படுத்திப்பார்க்கலாம்.
      stopped Firefox OS

      உங்களது அருமையான கருத்துக்கள் அடுத்து சிறந்த ஒரு பதிவிற்கு உதவும்.