Saturday, August 1, 2015

ANDROID MULTITASKING

Android சாதனங்களுக்கான Multitasking எனும் செயலியானது ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கருமங்களில் ஈடுபட உதவுகின்றது.

Multitasking Android செயலி


அதாவது உங்கள் Android சாதனத்தில் இருக்கக் கூடிய ஒரு செயலியைபயன்படுத்திக் கொண்டிருக்கும் அதே வேலை இன்னுமொரு செயலியின் உதவி தேவைப்படும் எனின் அதனை இந்த Multitasking எனும் செயலியில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.


உதாரணத்திற்கு உங்கள் Android சாதனத்தில் உள்ள Microsoft Office செயலி மூலம் நீங்கள் ஒரு ஆவணத்தை தயாரிக்கும் போது ஒரு கணித செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டும் எனின் Multitasking செயலியின் உதவியுடன் உடனடியாக அதிலுள்ள கணிப்பானை (Calculator) பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதே போல் நீங்கள் உங்கள் Android சாதனத்தை பயன்படுத்தி முகநூலை வலம் வரும் அதேநேரம் உங்கள் Android சாதனத்தில் உள்ள பாடல் ஒன்றை கேட்க நினைத்தால் Multitasking செயலியின் உதவியுடன் உடனடியாக அதிலுள்ள File Explorer வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.



Multitasking Games  

























மேலும் இணையத்தை உலாவரும் அதே நேரம் உடனடியாக புகைப்படம் ஒன்றை எடுக்க வேண்டும் எனில் Multitasking செயலியின் உதவியுடன் உடனடியாக அதிலுள்ள Camera வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு சந்தர்பங்களிலும் நீங்கள் செய்யும் பிரதான செயற்பாட்டுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் அதாவது குறிப்பிட்ட செயலியில் இருந்து வெளியேறாமல் இன்னுமொரு செயற்பாட்டையும் மேற்கொள்ள முடிகின்றமையே இதன் விசேட அம்சமாகும்.

அந்தவகையில் உங்கள் Android சாதனத்தின் மூலம் நீங்கள் வெவ்வேறு செயற்பாடுகளில் ஈடு படும் அதே நேரம் பின்வரும் செயற்பாடுகளையும் மேற்கொள்ளலாம்.

  • Browser இணையத்தை உலா வரலாம் 
  • Calculator - கணித செயற்பாடுகளை மேற்கொள்ளலாம் 
  • Calander - நாட்காட்டியை பயன்படுத்தலாம்.
  • Camera - புகைப்படங்களை எடுக்கலாம்.
  • Compass - திசைகளை அறியலாம் 
  • Currency - நாணய மாற்று விகிதங்களை அறியலாம்.
  • File Explorer -  கோப்புக்களை நிர்வகிக்கலாம்.
  • Gallery - உங்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோ கோப்புக்களை பார்க்கலாம்.
  • Maps- உலக வரை படத்தின் மூலம் குறிப்பிட்ட இடம் ஒன்றை தேடிப்பெறலாம்.
  • Music Player - பாடல் ஒன்றை கேட்கலாம்.
  • News - செய்திகளை வாசிக்கலாம்.
  • Voice - Recorder குரல் பதிவுகளை மேற்கொள்ளலாம்
  • Text To Speech - எழுத்துக்களை குரல் வடிவிற்கு மாற்றிக்கொள்ளலாம்.
  • Games - Flappy Bird போன்ற சுவாரஷ்யமான விளையாட்டுக்களில் ஈடுபடலாம்.

இது போன்று இன்னும் ஏராளமான வசதிகளை பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த Multitasking செயலியானது பல ஏராளமான சிறிய சிறிய வசதிகளை தன்னகத்தே கொண்டுள்ளது.


எனவே எமது Android சாதனம் மூலம் நாம் குறிப்பிட்ட ஒரு செயற்பாட்டில் ஈடுபடும் போது அந்த செயற்பாட்டில் இருந்து வெளியேறாமல் இன்னுமொரு செயற்பாட்டையும் மேற்கொள்ள உதவும் இந்த Multitasking செயலியை நீங்களும் உங்கள் Android சாதனத்துக்கு தரவிறக்கிக் கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.

Download Multitasking for Android