Saturday, August 1, 2015

HIDDEN SECERETS IN GOOGLE CHROME ADDRESS BAR


இணையத்தை அணுகுவதற்கு இணைய உலாவி என்பது இன்றியமையாத ஒன்றாகும். அந்த வகையில் இன்று உலகில் Google Chrome, Firefox, Opera, Internet Explorer என ஏராளமான இணைய உலாவிகள் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் Google ஆல் நிர்வகிக்கப்படும் Google Chrome இணைய உலாவியையே அதிகமானவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

Google Chrome tips

Google Chrome இணைய உலாவியானது வேகமாக இயங்கக்கூடிய அதே வேலை பல்வேறு வசதிகளையும் தன்னகமாக கொண்டுள்ளது. அவற்றுள் நாம் சிலவற்றினையே அறிந்திருந்தாலும் நாம் அறியாத பல வசதிகளும் இதில் உண்டு.




இதனடிப்படையில்.............

"வலிமையானதொரு கடவுச்சொல்லை உங்களுக்கு பரிந்துரைக்கும் Google Chrome இணைய உலாவி"

"Google Chrome இணைய உலாவியில் மறைந்திருக்கும் Tabs தொடர்பான ஒரு வசதி."

"Google Chrome இணைய உலாவியில் மறைந்திருக்கும் Profile Manager வசதியினை செயற்படுத்திக் கொள்வது எவ்வாறு?" என்பன  போன்ற இன்னும் பல பதிவுகள் மூலம் Google Chrome இணைய உலாவியில் மறைந்திருக்கும் வசதிகள் பற்றி பார்த்திருந்தோம்.

அதே போல் இணைய முகவரிகளை தட்டச்சு செய்ய மாத்திரமே என நாம் அறிந்து வைத்துள்ள Google Chrome இணைய உலாவியின் Address Bar இலும் பல்வேறு வசதிகள் தரப்பட்டுள்ளன. அவைகள் பின்வருமாறு.

1. கணித சமன்பாடுகளை தீர்க்கவும் ஒரு அலகை இன்னுமொரு அலகுக்கு மாற்றிக்கொள்ளவும்.

 Chrome Address Bar மூலம் மிக விரைவாக கணித சமன்பாடுகளை தீர்த்துக்கொள்ள முடிவதுடன் ஒரு அலகை மிக விரைவாக இன்னுமொரு அலகுக்கு மாற்றிக்கொள்ளவும் முடியும்.

Chrome address bar math


  • உதாரணம் 1:    2+5*10 எனும் கணித சமன்பாட்டை Chrome Address Bar இல் தட்டச்சு செய்து பாருங்கள் உடனடியாக விடை 52 என்பதை அறிந்துகொள்ள முடியும்.


  • உதாரணம் 2:  1 MB தரவுகளில் எத்தனை kb இருக்கும் என்பதனை அறிய 1 MB = kb என Chrome Address Bar இல் தட்டச்சு செய்து பாருங்கள் உடனடியாக விடை 1024 என்பது கிடைக்கும் (இது போல் எந்த ஒரு இன்னுமொரு அழகுக்கு மாற்றிக்கொல்லாம்)


2. உங்கள் இணைய உலாவியை ஒரு Text Editor ஆகவும் பயன்படுத்தலாம்.


பின்வரும் வரிகளை உங்கள் இணைய உலாவியின் Address Bar இல் தட்டச்சு செய்து Enter அழுத்திப்பாருங்கள். இனி உங்கள் இணைய உலாவியை ஒரு Text Editor போன்று பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்.

Chrome இணைய உலாவி உபாயங்கள்


  • மெல்லிய எழுத்துக்கள்: data:text/html, <html contenteditable>
மேலுள்ள வரிகளை Copy செய்துகொள்ள இங்கே சுட்டுக.



  • தடித்த எழுத்துக்கள் : data:text/html, <html style="font-weight: bold; font-family:Helvetica" contenteditable>
மேலுள்ள வரிகளை Copy செய்துகொள்ள இங்கே சுட்டுக.


3.குறிப்பிட்ட ஒரு சொல்லை Drag And Drop செய்வதன் மூலம் தேடலை மேற்கொள்ளலாம்.


நீங்கள் பார்க்கும் இணையதளங்களில் உள்ள ஒரு சொல் தொடர்பில் Google தளத்தில் தேடலை மேற்கொள்ள விரும்பினால் குறிப்பிட்ட சொல்லை தெரிவு செய்து Address Bar இல் Drop செய்து பாருங்கள் இனி குறிப்பிட்ட சொல் தொடர்பான தகவலை Google தளத்தில் தேடிப்பெறலாம்.



மேலும் இதனையும் பார்க்க: துல்லியமான தேடல் முடிவுகளை பெறுவதற்காக Google தளத்தில் மறைந்திருக்கும் வசதிகள் 

4. குறிப்பிட்ட ஒரு தளத்தில் தேடலை மேற்கொள்ள.

Chrome quick search

Amazon மற்றும் Ebay போன்ற முக்கிய பல இணையதளங்களில் ஒரு பொருள் தொடர்பாகவோ அல்லது ஏனைய ஒன்று பற்றிய தேடலை மேற்கொள்ள விருன்பினால் Chrome Address Bar இல் குறிப்பிட்ட தளத்தின் முகவரியை தட்டச்சு செய்து பின் Tab Button ஐ அழுத்துங்கள் பின் குறிப்பிட்ட தளம் நீல நிற கட்டம் ஒன்றினுள் தெரிவு செய்யப்படும் பின் குறிப்பிட்ட தளத்தில் தேட வேண்டிய சொல்லினை தட்டச்சு செய்து Enter அலுத்துக.

5. இணைய தளங்களில் இருக்கும் இணைய முகவரிகளை குறிப்பிட்ட ஒரு தாவலில் (Tab) திறந்துகொள்ள.

நீங்கள் பார்க்கும் இணையதளங்களில் உள்ள இணைப்புக்களை குறிப்பிட்ட ஒரு தாவலில் திறந்து கொள்ள வேண்டுமெனின் அந்த இணைப்பை Drag செய்து குறிப்பிட்ட தாவலில் Drop செய்க. இனி அது குறிப்பிட்ட தாவலில் உடனடியாக திறக்கப்படும்.


6. Chrome இணைய உலாவியை ஒரு File Explorer போன்று பயன்படுத்த.


உங்கள் கணனியில் இருக்கும் ஒரு வன்தட்டின் பாகத்திற்கான ஆங்கில எழுத்தினை Chrome இணைய உலாவியின் Address Bar இல் தட்டச்சு செய்வதன் மூலம் குறிப்பிட்ட பாகத்தில் உள்ள கோப்புக்களை Chrome இணைய உலாவியில் இருந்தவாறே பார்க்கலாம் 

Chrome File explorer


  • உதாரணத்திற்கு: வன்தட்டின் C பாகத்தில் உள்ள கோப்புக்களை Chrome இணைய உலாவி மூலம் பார்க்க Chrome இணைய உலாவியின் Address Bar இல் C:/ என தட்டச்சு செய்ய வேண்டும்.


7. புதிய மின்னஞ்சல் ஒன்றை உருவாக்க.


Chrome இணைய உலாவியின் Address Bar இல் mailto: என தட்டச்சு செய்வதன் மூலம் புதிய மின்னஞ்சல் ஒன்றினை உருவாக்குவதற்கான சாளரத்தினை பெற்றுக்கொள்ளலாம். (உங்கள் கணினியில் மின்னஞ்சலை நிர்வகிப்பதற்காக நிறுவப்பட்டிருக்கும் பொதுவான (default) மென்பொருளில் இது திறக்கப்படும்)


8. உடனடியாக இணைய முகவரி ஒன்றினை உருவாக்கிக்கொள்ள.


முதலில் "www" என்றும் இறுதியில் ".com" என்றும் காணப்படும் இணைய முகவரிகளை Address Bar மூலம் மிக விரைவாக உருவாக்கிக்கொள்ளலாம்.

அதாவது www.tamilinfotech.com என்ற முகவரியை Address Bar இல் முழுமையாக தட்டச்சு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மாறாக tamilinfotech என்பதை மாத்திரம் தட்டச்சு செய்துவிட்டு Ctrl+Enter விசைகளை அழுத்துவதன் மூலம் www.tamilinfotech.com என்ற தளத்துக்கு உடனடியாக பிரவேசிக்கலாம்.


9. குறிப்பிட்ட ஒரு தாவலில் இருந்தவாறே புதியதொரு தாவலை பயன்படுத்த.


இணைய உலாவி மூலம் நீங்கள் குறிப்பிட்ட ஒரு இணையதளத்தை பார்க்கும் போது புதியதொரு தாவலில் இன்னுமொரு இணையதளத்தினை திறக்க வேண்டி ஏற்பட்டால் அல்லது புதிய ஒரு தாவலில் குறிப்பிட்ட ஒரு சொல் தொடர்பாக தேடலினை மேற்கொள்ள விரும்பினால் குறிப்பிட்ட இணைய முகவரியை அல்லது சொல்லை நீங்கள் பயன்படுத்தும் அதே தாவலில் தட்டச்சு செய்து Alt+Enter விசைகளை அலுத்துக இனி அது புதியதொரு தாவலில் திறப்பதனை அவதானிப்பீர்கள்.