Saturday, August 1, 2015

USB LOCK SYSTEM FOR YOUR COMPUTER- IT WORKS AS A KEY

நாம் எமது கணனியை ஏனையவர்கள் பயன்படுத்த முடியாத வகையில் பல்வேறு உபாயங்களை கையாள்வோம் அல்லவா?

இதற்கு அதிகமாக கடவுச்சொல் முறை பயன்படுத்தப்பட்டாலும் கடவுச்சொல்லுக்கு பதிலாக எமது USB Drive சாதனத்தை பயன்படுத்த உதவுகின்றது USB System Lock எனும் இலவச மென்பொருள்.


lock computer using usb drive

இந்த மென்பொருளானது 1 Mb இற்கும் குறைவான அளவையே கொண்டுள்ளமையால் இதனை தரவிறக்குவது இலகு என்பதுடன் கணனியை பயன்படுத்தும் எந்த ஒரு தரப்பினராலும் இதனை மிக இலகுவாக பயன்படுத்திக் கொள்ளவும் முடியும்.




உங்கள் USB Drive சாதனத்தை கணனியுடன் இணைத்த பின் தரவிறக்கப்பட்ட இந்த மென்பொருளை நிறுவுக.

நிறுவுவதற்கான சாளரத்தில் இறுதியாக Finsh என்பதை அழுத்தியவுடன் தோன்றும் சிறிய சாளரத்தின் மூலம் உங்கள் USB Flash Drive சாதனத்தை தெரிவு செய்து Next அலுத்துக.

அவ்வளவுதான்


இனி நிறுவப்பட்ட USB System Lock மென்பொருளை சுட்டும் போது உங்கள் கணனி Lock செய்யப்படும் பின் அதனை நீக்கிக் கொள்ள மீண்டும் USB Flash Drive சாதனத்தை இணைத்தாக வேண்டும்.

இதனையும் பார்க்க: தவறான கடவுச்சொல்லை உள்ளிட்டு கணணியை இயக்க முயற்சிப்பவரை படம்பிடித்து காட்டும் அருமையான மென்பொருள்.

இந்த மென்பொருளை  கணனி இயங்கும் போதே இயங்கச் செய்ய வேண்டுமாயின் இதனை Start Up எனும் கோப்புறையில் சேர்த்துக்கொள்ளலாம்.

  • இதனை மேற்கொள்ள விரும்பினால் கீழுள்ள வழிமுறைகளை பின்பற்றுக.
  • Win+R விசைகளை அழுத்துவதன் மூலம் Run Program ஐ திறந்து கொள்ளுங்கள் 
  • பின் அதில் shell:startup என தட்டச்சு செய்து Enter அலுத்துக.
  • இனி திறக்கும் கோப்புறையில் Right-Click செய்து New ===> Shortcut என்பதை அலுத்துக.
  • பிறகு தோன்றும் சாளரத்தில் உள்ள browse என்பதனை சுட்டுவதன் மூலம் C:\Program Files\USB System Lock\ எனும் கோப்புறையில் உள்ள USBSystemLock.exe என்பதனை தெரிவு செய்து OK அலுத்துக.


இனி உங்கள் கணனி துவங்கும் போதே Lock செய்யப்படும் அதனை Unlock செய்ய குறிப்பிட்ட USB Flash Drive சாதனம் இருந்தால் மட்டுமே முடியும்.