Saturday, August 1, 2015

SOMEBODY MISUSE YOUR COMPUTER THIS APPLICATION CATCH THE PERSON--HOW READ MORE

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பட்டியலில் கணணியும் ஒன்றாகி விட்டது.

இதில் நாம் விலை மதிக்க முடியாத பல ஆவணங்கள், கோப்புக்கள், புகைப்படங்கள், வீடியோ என பலவற்றினை சேமித்து வைத்திருப்போம். மற்றும் அடுத்தவர்கள் கண் படாமல் வைத்திருக்க வேண்டியவைகள் என பலவும் இருக்கும். நாம் கணணியை பயன்படுத்தும் போது அடிக்கடி ஒரு இடைவேளை எடுப்பதுண்டு. அப்போது நாம் கணணியை Shutdown செய்வதில்லை இதற்கு காரணம் பல இருக்கலாம்.

lock pc


என்றாலும் நாம் இல்லாத சந்தர்பத்தில் எமது கணணியை யாரும் தவறாக பயன்படுத்தாமல் இருக்க கணனிக்கு Lock என்பதை பயன்படுத்துவோம்.

lock desktop


இதற்காக Lockscreen Pro எனும் ஒரு அருமையான மென்பொருள் உள்ளது. இதன் சிறப்பம்சம் பல உள்ளது.  சுட்டிக்காட்ட வேண்டுமாயின் இந்த மென்பொருள் மூலம் எமது கணணியை திறக்க Pen Drive இனை ஒரு திறப்பு போல் பயன்படுத்தலாம், தவறான கடவுச்சொல்லினை உள்ளிட்டு கணணியை Unlock செய்ய முயற்சிக்கும் போது webcam ஊடாக தானியக்க முறை மூலம் Photo எடுக்கலாம்.


இதன் பொதுவான Password, admin என்பதாகும். தேவை எனின் மாற்றிக்கொள்ளலாம். USB Drive மூலம் கணணியை Lock செய்வதற்கு Unlock With USB என்பதற்கு முன் இருக்கும் Check Box ஐ Tick செய்ய வரும் Config USB என்பதனை தெரிவு செய்தபின் குறிப்பிட்ட USB Drive இனை கணனியுடன் இணைத்தால் USB Drive இல் கணணியை Unlock செய்வதற்கான Key File நிறுவப்பட்டு விடும் பிறகு நாம் Lock செய்த பின் Unlock செய்வதற்கு USB Drive இனை கணனியுடன் இணைத்தால் Unlock ஆகிவிடும்.

unlock pc from usb
இதனை பயன் படுத்துவது மிகவும் சுலபம். அத்துடன் இதனை கணனியில் நிறுவ வேண்டிய அவசியமுமில்லை. சிறிய ஒரு மென்பொருளேயாகும். எந்த ஒரு Windows இயங்குதளத்திலும் சிறப்பாக இயங்குகிறது. கீழுள்ள இணைப்பின் மூலம் இதனை தரவிறக்கலாம்.