Saturday, August 1, 2015

WORRY ABOUT WRITE PROTECTED USB DRIVE - SOLUTION HERE

இன்றைய கணனி உலகில் USB Drive ஆனது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. எமக்குத் தேவையான தரவுகளை சேமித்து வைப்பதற்கும் ஒரு கணனியிலிருந்து இன்னுமொரு கணனிக்கு மிக இலகுவில் தரவுகளை பரிமாரிக்கொள்வதற்கும் USB Drive இன்றி அமையாத ஒருசாதனமாக உள்ளது.

USB Drive சாதனங்கள் நீண்ட ஆயுளைக் கொண்டிருந்தாலும் சில வேளைகளில் இவைகள் மூலம் தற்காலிக இடையூறுகளை எதிர் நோக்கவும் ஏற்படலாம்.


சில நேரங்களில் எமது கணனியிலிருந்து USB Drive இற்கு தரவுகளை Copy Past செய்கையில் குறிப்பிட்ட கோப்பினை Past செய்ய முடியாதவாறு  "The disk is write protected" எனும் பிழைச் செய்தியானது பொதுவாக ஏராளமான USB Drive களில் எழக்கூடிய பிரச்சினையாக உள்ளது.


The disk is write protected on flash drive



இது பல்வேறு காரணங்களால் ஏற்படுகின்றது.

1. Virus Guard மென்பொருளை கொண்டு சோதியுங்கள் 

 

scan with avg

 

இதற்குக் காரணம் ஒரு வேளை கணனிக்கு தீங்கு விளைவிக்கும் நச்சு நிரல்களின் (Virus)  செயற்பாடாகவும் இருக்கலாம்.



எனவே இது போன்ற பிழைச் செய்தி உங்கள் USB Drive இலும் தோன்றினால் முதலில் அதனை சிறந்த ஒரு Virus Guard மென்பொருளை கொண்டு சோதித்து அதிலிருக்கும் நச்சு நிரல்களை நீக்கி விட்டு பயன்படுத்திப் பாருங்கள். அவ்வாறு எவ்வித நச்சு நிரல்களும் இருக்கவில்லை அல்லது அவைகளை நீக்கிய பின்னும் குறிப்பிட்ட பிழைச் செய்தி தோன்றினால் பின்வரும் விடயத்தினை கவனத்தில் கொள்க.

2.write protect Switch இனை சோதியுங்கள்


usb சாதனம்


சில USB Drive சாதனங்களில் அதில் சேமிக்கப்பட்டிருக்கும் தரவுகளை பாதுகாப்பதற்காக write protect என அழைக்கப்படும் Switch ஒன்று தரப்பட்டிருக்கும் எனவே அது ஒருவேளை உங்களை அறியாமல் மேல்/கீழ் சென்றிருக்கலாம் எனவே அதனை ஒருமுறை சோதித்தறியுங்கள் அப்படியும் இல்லை எனின் கீழ் தரப்பட்டிருக்கும் விடயத்தினை கவனிக்க



3.முழுமையாக தரவுகள் சேமிக்கப்பட்டிருப்பதா என்பதை அவதானியுங்கள்.

usb drive properties


சில வேளைகளில் உங்கள் USB Drive முழுமையாக தரவுகள் சேமிக்கப்பட்டிருப்பதாலும் இந்த பிழைச் செய்தி தோன்றலாம் எனவே குறிப்பிட்ட USB Drive ஐ Right Click செய்து Properties செல்வதன் மூலம் அது முழுமையாக நிரப்பபட்டுள்ளதா? என கண்டறிக அவ்வாறு உங்கள் USB Drive முழுமையாக தரவுகளால் நிரப்பப் பட்டிருந்தால் USB Drive இல் இருக்கும் தேவை அற்ற கோப்புக்களை நீக்கி விட்டுமீண்டும் பயன்படுத்திப் பாருங்கள் இருப்பினும் குறிப்பிட்ட பிழைச் செய்தி தோன்றினால் பின்வரும் வழிமுறையை பின்பற்றுக.

  4.Command Prompt இனை பயன்படுத்தி முயற்சி செய்து பாருங்கள். 

 

windows Command Prompt


  • இதற்கு, முதலில் Command Prompt இனை திறந்து diskpart என தட்டச்சு செய்க
  
  • இனி உங்கள் கணனியில் புதியதொரு Command Prompt திறப்பதற்கான அனுமதியை உங்களிடம் கேற்கும் Yes என்பதனை அழுத்தி புதிய Command Prompt இனை பெருக சில கணனிகளில் அனுமதி இன்றியே புதிய Command Prompt திறக்கப்படலாம்.
  
  • பின் புதிதாக திறக்கப்பட்ட Command Prompt இல் list disk என தட்டச்சு செய்க இதில் உங்கள் USB Drive பட்டியல் படுத்தப்படும். இதில் Disk 0, Disk 1, Disk 2 என பட்டியல் படுத்தப்படும் உதாரணத்திற்கு உங்கள் USB Drive, Disk 2 என பட்டியல் படுத்தப்பட்டால் select disk 2 என தட்டச்சு செய்து Enter அலுத்துக.
  
  • பின்  attributes disk clear readonly என தட்டச்சு செய்து Enter அலுத்துக. அவ்வளவுதான் Exit என தட்டச்சு செய்து Enter அழுத்தி Command Prompt இல் இருந்து வெளியேறிய பின் மீண்டும் பயன்படுத்திப் பாருங்கள். இருந்து குறிப்பிட்ட பிழைச் செய்தி தோன்றினால் பின்வரும் வழிமுறையை பின்பற்றுக.

    5.Registry Editor இனை பயன்படுத்தி முயற்சி செய்க

     

    windows registry editor

     

    • உங்கள் Windows கணனியில் தரப்பட்டிருக்கும் Registry Editor இனை திறந்து கொள்க இதனை திறக்க Run இல் regedit என தட்டச்சு செய்க.
      
    • பின் திறக்கப்படும் Registry Editor இல் HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\StorageDevicePolicies வரை செல்லுங்கள்
      
    • இனி அங்கு WriteProtect என ஒரு கோப்பினை காண்பீர்கள் அதனை Right Click செய்து  Modify என்பதனை அலுத்துக.
      
    • இதில் Value data என்பதற்குக் கீழ் 1 என இருந்தால் அதனை 0 என மாற்றி OK அழுத்துங்கள் அவ்வளவு தான் இனி USB Drive இனை கணனியிலிருந்து அகற்றி விட்டு மீண்டும் இணைத்து பயன்படுத்திப்பாருங்கள்.