Saturday, August 1, 2015

WINDOWS 10 CORTANA

microsoft நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கும் விண்டோஸ் 10 இயங்குதளத்தில் Cortana எனும் ஒரு வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
Microsoft Corporation Introduces Cortana On Windows 10
Microsoft cortana android செயலி


எமது குரல் கட்டளைகள்  மூலம் வெவ்வேறு பட்ட வசதிகளை பெறுவதற்கான வசதியே இதுவாகும்.


இந்த வசதியானது இன்னும் சில நாட்களுக்குள்  Windows Phone சாதனங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ள நிலையில் Android மற்றும் iOS சாதனங்களுக்கான செயலிகளையும் அறிமுகப்படுத்த இருப்பதாக Microsoft நிறுவனம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

அந்தவகையில் Android சாதனத்துக்கான Cortana இன் செயலி இணையத்தில் வெளியாகி உள்ளது. எனினும் இதனை Microsoft நிறுவனம் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.

எது எப்படியோ பின்வரும் இணைப்பில் உள்ள APK கோப்பினை தரவிறக்கி உங்கள் Android சாதனத்தில் நிறுவுவதன் மூலம் உங்களாலும் இந்த வசதியை பெற்றுக்கொள்ள முடியம்.

Apple சாதனங்களில் உள்ள Siri மற்றும் Android சாதனங்களில் உள்ள Google Now போன்ற வசதியே இதுவாகும்.

இந்த Cortana செயலிக்கு எமது இனிய தமிழ் இது வரை தெரியாது என்றாலும் எதிரகாலத்தில் Cortana உம் தமிழ் மொழியை கற்றுக்கொள்ளும் என்பதில் நாம்பிக்கை உள்ளது.

எனினும் நாம் ஆங்கிலத்தில் இடும் குரல் கட்டளைகளுக்கு இது செவிசாய்த்து ஏராளமான கருமங்களை மிக இலகுவாக நிறைவேற்றிக் கொள்ள உதவுகின்றது.

 Android Cortana APK செயலி Android செயலி Cortana Android cortana செயலி

உதாரணத்திற்கு சில குரல் கட்டளைகள் பின்வருமாறு. 

அழைப்புக்களை மேற்கொள்ள

  • குறிப்பிட்ட ஒரு நபருக்கு அழைப்பை மேற்கொள்ள வேண்டும் எனின் Call Toஎன்பதன் பின் அவரது பெயரை கூற வேண்டும். உதாரணத்திற்கு குறிப்பிட்ட நபரின் பெற X எனின் Call to X என்பதன் மூலமோ அல்லது Make a call to xஎன்பதன் மூலமோ குறிப்பிட்ட நபருக்கு அழைப்பினை மேற்கொள்ளலாம்.
  • குறிப்பிட்ட நபருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தொலைபேசி இலக்கங்கள் இருப்பின் நாம் Home, Mobile, Office, Work என வெவ்வேறாக சேமித்திருப்போம் அல்லவா? இதன் போது அவரது வீட்டு இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொள்ள வேண்டும் எனின் Make a call to X at home அல்லது Call X, home என கட்டளை இடலாம்.

குறுந்தகவல் ஒன்றினை அனுப்புவதற்கு 

  • குறுந்தகவலை பெரும் நபரின் பெயர் X என வைத்துக்கொண்டால் Text Xஎன்பதன் மூலமோ Message என்பதன் மூலமோ குறிப்பிட்ட நபருக்கு குறுஞ்செய்தி ஒன்றினை அனுப்புவதற்கான வசதியை பெறலாம்.

உங்கள் Android சாதனத்தில் உள்ள நாட்காட்டியை நிர்வகிப்பதற்கு.

  • ஒரு நடவடிக்கையை நாட்காட்டியில் குறித்துக் கொள்வதற்கு குறிப்பிட்ட நடவடிக்கையுடன் Put on my calendar எனும் கட்டளையை இட வேண்டும்.
  • உதாரணத்திற்கு விளையாட வேண்டும் என்பதை நாட்காட்டியில் குறித்துக்கொள்ள வேண்டும் எனின் Put Play on my calendar என கட்டளை இடலாம் அல்லது நாளை விளையாட வேண்டும் என்பதை நாட்காட்டியில் குறிப்பிட வேண்டும் எனின் Put Play on my calendar for tomorrow என கட்டளை இடலாம். ஏற்கனவே 2 மணிக்கு குறிப்பிட்ட நிகழ்வொன்றை 3 மணிக்கு மாற்ற வேண்டும் எனின் Change my 2 PM event to 3 என குரல் கட்டளை இடலாம்.
  • உங்கள் நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள அடுத்த நிகழ்வு என்ன என்பதை அறிவதற்கு What do I have next? என குரல் கட்டளை இடலாம்.

குறிப்பிட்ட ஒரு நேரத்தில் குறிப்பிட்ட ஒரு விடயத்தை ஞாபகப் படுத்திக் கொள்வதற்கு.

  • நாளை உங்கள் Phone Charger ஐ எடுக்க ஞாபகப்படுத்த வேண்டும் எனின்Remind me to pick up my Phone Charger tomorrow என குரல் கட்டளை இடலாம்.
  • குறிப்பிட்ட ஒரு நேரத்தில் அலாரத்தை அமைத்துக் கொள்ள வேண்டும் எனின்குறிப்பிட்ட நேரத்துடன் Wake me up at என்பதை குறிப்பிடலாம்.
  • உதாரணத்திற்கு நாளை காலை 6 மணிக்கு அலாரத்தை அமைக்க வேண்டும் எனின் Wake me up at 6 AM என குறிப்பிடலாம் அல்லது Set an alarm for 6 AM என குறிப்பிடலாம்.
  • ஏற்கனவே வைக்கப்பட்ட அலாரத்தை நிறுத்துவதற்கு குறிப்பிட்ட நேரத்துடன் Turn off my alarm என குறிப்பிடலாம். உதாரணத்திற்கு முற்பகல்5 மணிக்கு வைத்த அலாரத்தை நிறுத்துவதற்கு Turn off my 5 AM alarm என குறிப்பிடலாம்.
  • குறிப்பொன்றை எடுப்பதற்கு Take a note என்பதன் மூலம் குறிப்புகளை எடுப்பதற்கான செயலிகளை திறந்து குறிப்புகளை எழுதலாம் மேலும் Take a note: என்பதுடன் குறிப்பிட்ட விடயத்தை குறிப்பிடலாம்.
  • இவைகள் தவிர வானிலை தொடர்பான தகவல்களை அறிவதற்கும், Music Player மூலம் பாடல்களை நிர்வகிப்பதற்கும், பொதுவான கேள்விகளுக்கு விடைகளை அறிவதற்கும், நிதியியல் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வதற்கும், விளையாட்டு தகவல்களை அறிந்து கொள்வதற்கும், விமானங்கள் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வதற்கும் என ஏராளமான வசதிகளை இதன் மூலம் பெற முடியும்.
இதனை Microsoft நிறுவனம் ஒரு பெண்ணாகவே அறிமுகப்படுத்துகின்றது இதனால் இதன் மூலம் வெளிப்படுத்தப்படும் குரல் பெண் குரலாகவே அமைந்துள்ளது.




மேலும் நீங்கள் பயன்படுத்துவதற்கு Microsoft கணக்கொன்றினை கொண்டிருக்க வேண்டும் உங்களிடம் Microsoft கணக்கு ஒன்று இல்லையெனின் பின்வரும் இணைப்பு மூலம் கணக்கொன்றினை உருவாக்கிக் கொள்ள முடியும்.

Create A Microsoft Account


பின்வரும் இணைப்பில் உள்ள APK கோப்பினை தரவிறக்கி உங்கள் Android சாதனத்திற்கு நிறுவுவதன் மூலம் இதனை உங்கள் Android சாதனத்திலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Download Cortana APK For Android (19 MB)