Saturday, August 1, 2015

ADVANCED ANTROID APPS

இன்று அறிமுகப்படுத்தப்படும் Mobile சாதனங்களானது ஆரம்பத்தில் போல் அழைப்புக்களை மேற்கொள்வதற்கு மாத்திரம் அல்லாது  இன்னும் ஏராளமான பல பயன்களை பெற்றுக்கொள்ள முடிகின்றது.

 Sensor Sense Android செயலி




இதற்கு சான்று பகரும் வகையில் இன்றைய Smart சாதனங்கள் மூலம் நேரடியாகவே தமிழ் தொலை காட்சிகளை பார்க்க முடிவதுடன் நாம் கணினி மூலம் ஆவணங்களை தயாரிப்பதற்காக பயன்படுத்தும் Micros office வசதியையும் எமது Smart சாதனங்கள் மூலம் பயன்படுத்திக் கொள்ளவும் எழுத்து வடிவில் அமைந்த எந்த ஒன்றினையும் Digital வடிவில் மாற்றிக்கொள்ளவும் என பல்வேறு வசதிகளையும் பெற்றுக்கொள்ள உதவும் செயலிகளை நாம் எமது முன்னைய பதிவுகள் மூலம் அறிமுகப்படுத்தி இருந்தோம் அல்லவா?

அதே போல் இன்னும் பல பயனுள்ள வசதிகளை பெற்றுக்கொள்ள உதவுகின்றது Sensor Sense எனும் Android சாதனத்துக்கான செயலி.

இதன் மூலம் பின்வரும் வசதிகளை பெற்றுக்கொள்ள முடியும்.

  • Temperature - உங்களை சுற்றியுள்ள வெப்பநிலையின் அளவு என்ன?
  • Pressure - உங்களை சூழ உள்ள இடத்தில் இருக்கும் காற்றின் அழுத்தம் எவ்வளவு?
  • Relative humidity - உங்களை சூழவுள்ள பகுதியில் ஈரப்பதம் எத்தனை சதவீதம்?
  • Light - உங்களை சூழவுள்ள பிரதேசத்தின் வெளிச்சம்/பிரகாசம் எத்தகையது?
  • Battery - உங்கள் Android சாதனத்தின் Battery எந்த அளவு வெப்பநிலையில் உள்ளது அதில் இன்னும் எத்தனை சதவீதம் மின் சக்தி சேமிக்கப்பட்டுள்ளது?
  • Magnetic field - உங்களை சூழ உள்ள பிரதேசத்தின் காந்த சக்தி?
  • Gyroscope - உங்கள் Android சாதனம் இருக்கும் இடத்தில் சுழலும் வேகம் எத்தகையது?
  • Sound - உங்களை சூழ உள்ள பகுதியில் எந்த அளவு ஒலி (சத்தம்) ஏற்படுத்தப்படுகின்றது?

இவைகள் தவிர இன்னும் பல வசதிகளை இந்த செயலி மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் மேற்குறிப்பிட்ட நிலைமைகள் தொடர்பான நிகழ்நேர வரைபடத்தையும் இந்த செயலி மூலம் பார்க்க முடிவதுடன் மேற்குறிப்பிட்ட ஏதாவது ஒரு சந்தர்பத்தில் ஏற்படும் புள்ளி விபரத்தினை சேமித்து பகிர்ந்து கொள்ளவும் முடியும்.


நீங்களும் இத செயலியை பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.

Download Sensor Sense (sensors) For Android


குறிப்பு: இந்த செயலியில் தரப்பட்டுள்ள சில நிலைமைகளை உணர்வதற்கான வசதி சில Android சாதனங்களில் தரப்படாமல் இருக்கலாம்.